கல்லூரி மாணவி திடீர் மாயம்

தியாகதுருகம் அருகே கல்லூரி மாணவி திடீர் மாயம்

Update: 2022-10-09 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே வரதொரசலூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன் மகள் வசந்தி(வயது 19). இவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. கணிணி அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வெளியே சென்ற மாணவியின் தாய்-தந்தை இருவரும் மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் இருந்த வசந்தியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவியை காணவில்லை. இது குறித்த புகாாின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வசந்தியை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்