கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
கருங்கல் போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
கருங்கல்,
கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் மணலிக்குழிவிளை தாணிவிளையை சேர்ந்தவர் ராஜன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் பெனிஷா (வயது22). இவர் அம்மாண்டிவிளையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் பெனிஷா கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் பெனிஷாவை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் பெனிஷா ரீத்தாபுரம் வடலிக்காட்டுவிளையை சேர்ந்த பிரபு மகன் பெஞ்சமின் அருள் (29) என்பவருடன் கருங்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர்கள் போலீசாரிடம், 'நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி திக்கணங்கோட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டோம். எங்களை சேர்த்து வைக்க வேண்டும்' என்றனர். இதையடுத்து போலீசார் இருவரிடம் எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்தனர்.