கல்லூரி மாணவி மாயம்

ஓச்சேரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மாயமானார்.

Update: 2023-05-13 17:05 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவி, ஆற்காட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கல்லூரிக்கு சென்றவர் அதன்பிறகு, வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்