கல்லூரி மாணவி மாயம்
சின்னசேலம் அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே பாண்டியன்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகள் பவானி (வயது 19). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற பவானி வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி அலைந்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பவானியை தேடி வருகின்றனர்.