ஆம்பூர் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
ஆம்பூர் அருகே லாரி மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் காதர்பேட்டை 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் அப்பான்நுதீன் (வயது 20), தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
ஆம்பூர் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது பின்னால் வந்த லாரி திடீரென அவர் மீது மோதியது. இதில் அப்பான்நுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலட அறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் அங்கு சென்று அப்பான்நுதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.