மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியானார்

Update: 2023-03-28 19:24 GMT

திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளச்சாமி. இவரது மகன் விஜய் (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் கல்லூரி முடிந்ததும் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் விஜய் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவரையும், விஜயையும் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் விஜய் பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்