கார் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்

கிணத்துக்கடவு அருேக கார் மோதி கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-08-26 20:15 GMT

கிணத்துக்கடவு

தூத்துக்குடி மாவட்டம் அனல்மின்நகரை சேர்ந்தவர் பன்னீர். இவருடைய மகன் முருகேஷ் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று முருகேஷ் பொள்ளாச்சியில் உள்ள நண்பரை பார்க்க, நண்பர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிச்சென்றார். பின்னர் நண்பரை பார்த்துவிட்டு கிணத்துக்கடவுக்கு வந்து கொண்டிருந்தார்.

தாமரைக்குளம் அருகே 4 வழிச்சாலையில் வந்தபோது, பின்னால் வந்த கார் முருகேஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்