பஸ்சில் இருந்து தவறிவிழுந்து கல்லூரி மாணவர் காயம்

அரக்கோணம் அருகே படிக்கட்டில் பயணம் செய்த மாணவர் தவறிவிழுந்து காயமடைந்தார்.

Update: 2023-07-20 18:47 GMT

அரக்கோணத்தை அடுத்த பெருமூச்சி பகுதியை சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் திருத்தணி அரசு கல்லூரியில் படித்து வருகிறார். அவர் நேற்று காலை கல்லூரி செல்வதற்காக பெருமூச்சியில் இருந்து அரசு பஸ்சில் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள வேகத்தடை மீது பஸ் ஏறி இறங்கிய போது படியில் நின்றிருந்த மாணவர் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்