சாணார்பட்டி அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

சாணார்பட்டி அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2022-12-29 16:29 GMT

சாணார்பட்டி அருகே உள்ள சிலுவத்தூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மலையாண்டி. இவரது மகன் வேல்முருகன் (வயது 18). இவர் திண்டுக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் வேல்முருகன் இன்று தனது நண்பர்களுடன் சிலுவத்தூர் அருகே உள்ள பண்ணைப்பட்டி சந்தானவர்த்தினி ஆற்றில் குளிக்க சென்றார். அங்கு ஆற்றில் குளித்துகொண்டிருந்த வேல்முருகன் திடீரென்று நீரில் மூழ்கினார். இதனை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதற்கிடையே நீரில் மூழ்கி வேல்முருகன் பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆற்றில் மூழ்கிய வேல்முருகனின் உடலை கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இனஸ்பெக்டர் சிராஜூதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்