மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் சாவு

வீரவநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-06 21:35 GMT

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பொன்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் சுரேந்தர்குமார் (வயது 20). இவர் சேரன்மாதேவியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். கல்லூரி விடுமுறை என்பதால் தெற்கு வீரவநல்லூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் தோட்டத்துக்கு சென்ற சுரேந்தர்குமார் மதியம் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். குரும்பன்குளம் வளைவு பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு கம்பியில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுரேஷ்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரவநல்லூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்