சாலையோர தடுப்பில் மோதி கல்லூரி மாணவர் சாவு
சாலையோர தடுப்பில் மோதி கல்லூரி மாணவர் இறந்தார்.
கொட்டாம்பட்டி
மேலூர் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் சங்கர்சக்தி (வயது 23). மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் மேலூரில் இருந்து கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம். இதேபோல் நேற்று மாலை கல்லூரி முடிந்து மேலூருக்கு திரும்பி வந்துள்ளார். மதுரை திருச்சி நான்கு வழிச்சாலையில் விநாயகபுரம் அருகே வரும்போது நிலை தடுமாறி சாலையோர தடுப்பில் மோதினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சங்கர்சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.