பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் சாவு

பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் இறந்தார்.

Update: 2023-07-19 19:15 GMT

கரூர் மாவட்டம் மனவாடி பெருமாள்பட்டி காலனியை சேர்ந்தவர் நெப்போலியன். இவரது மகன் இன்பன் பிரகாஷ்ராஜ் (வயது 23). இவர் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி திருச்சி கலை காவேரி கல்லூரியில் எம்.ஏ. மிருதங்கம் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இன்பன் பிரகாஷ்ராஜ் தனது மோட்டார் சைக்கிளில் கருமண்டபத்தில் இருந்து அரிஸ்டோ மேம்பாலம் வழியாக சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இன்பன் பிரகாஷ்ராஜ் பலத்த காயம் அடைந்தார். இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்