மோட்டார்சைக்கிள் மோதி கல்லூரி மாணவி சாவு

வேலூர் அருகே மோட்டார்சைக்கிள் மோதி கல்லூரி மாணவி பலியானார்.

Update: 2022-10-17 17:59 GMT

வேலூர் பாகாயம் இடையன்சாத்து ராமலிங்க நகரை சேர்ந்தவர் சம்பத். இவரது மகள் கோகிலா (வயது 22). வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி முடிந்து வீட்டுக்கு பஸ்சில் சென்றார். இடையன்சாத்து பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து ஆரணி நோக்கி சென்ற மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்