கல்லூரி மாணவர் மர்மசாவு
கல்லூரி மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே உள்ள முதுவந்திடல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் மதுரை மதிச்சியத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் சஞ்சய் (வயது 17). இவர் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 2 மாதமாக சஞ்சய் முதுவந்திடலில் உள்ள தனது பாட்டி முத்தம்மாள் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில்வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அங்குள்ள வடக்கு கண்மாய்கரை அருகே சஞ்சய் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மாணவரின் தாயார் தனலெட்சுமி பழையனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் விசாரணை நடத்தி வருகிறார்.