கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

கொடுமுடி அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-17 21:36 GMT

கொடுமுடி

கொடுமுடி அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி

கொடுமுடி அருகே உள்ள கொந்தளம் மண்திட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், இவருடைய மனைவி தனலட்சுமி. மகள் தேவதர்ஷினி (வயது 18). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.எம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் மகளை தேடி சென்றார்கள். அப்போது அங்குள்ள விவசாய கிணற்றில் தேவதர்ஷினி பிணமாக மிதந்தார்.

தற்கொலை ஏன்?

இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள். அதன்பின்னர் கிணற்றில் இருந்து தேவதர்ஷினியின் உடல் மேலே கொண்டுவரப்பட்டது. பிறகு பிரேத பரிசோதனைக்காக போலீசார் உடலை கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். தேவதர்ஷினி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவதர்ஷினி ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்