தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை
போடி அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் காந்திஜி காலனியை சேர்ந்தவர் சித்ரா. கூலித்தொழிலாளி. இவரது மகள் ஹேமதர்ஷினி (வயது 18). இவர், போடியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் கலைக் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஹேமதர்ஷினியை அவரது தாய் சித்ரா நன்றாக படிக்கும் படி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சித்ரா, போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.