கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கடலூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை ரத்னாநகரை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் மகன் பாலாஜி (வயது 22). கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர் செமஸ்டர் தேர்வில் 4 பாடங்கள் தேர்ச்சி பெறவில்லை என்று தெரிகிறது. இதை அறிந்த அவரது பெற்றோர் பாலாஜியை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி சந்தானகிருஷ்ணன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.