கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

லால்குடி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-15 14:08 GMT

லால்குடி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவக்கல்லூரி மாணவி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழவாளாடி அக்ரஹாரம் கே.என். நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் தனுஷ்ஸ்ரீ (வயது 19). இவர் வேலூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்.சி.லேப் டெக்னீசியன் முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளதையொட்டி கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் தனுஷ்ஸ்ரீ சொந்த ஊருக்கு வந்து இருந்தார். நேற்று முன்தினம் காலையில் அவர் கல்லூரிக்கு செல்வதற்காக துணிகளை மடித்து வைத்து பையை தயாராக வைத்து இருந்தார்.

தற்கொலை

பின்னர் அவர் வீட்டு படுக்கை அறைக்கு சென்று உள்பக்கமாக தாழிட்டு கொண்டார். இதனிடையே அவர் நீண்டநேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த மாணவியின் தாய் கதவை தட்டி உள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தனுஷ்ஸ்ரீ தூக்கில் பிணமாக தொங்கினார். மகளின் உடலைபார்த்து தாய் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனுஷ்ஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேர்வு பயத்தில் தனுஷ்ஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்