கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருவெண்ணெய்நல்லூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-11-07 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் சிவசுப்பிரமணியன்(வயது 19). திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்த இவர் வயிற்றுவலியால் பெரியசெவலை ஏரியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்