காதலை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே காதலை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-18 18:15 GMT

ஜோலார்பேட்டை அருகே காதலை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவர்

ஜோலார்பேட்டையில் உள்ள சின்னக்கோடியூர் காந்திரோடு கே. கே.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் ரீகன் (வயது 18). இவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் ஒரு பெண்ணை ரீகன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் ரீகனை கண்டித்துள்ளனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

மேலும் நேற்று முன்தினம் இரவு ரீகனுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் ரீகன் தூக்குப் போட்டுக்கொண்டார்.

உடனடியாக அவரை மீட்டு ஜோலார்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, ரீகன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இது குறித்து ரீகனின் தந்தை சுரேஷ் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்