டீ மாஸ்டரை உருட்டுக்கட்டையால் தாக்கிய கல்லூரி மாணவர் கைது

முன்விரோதம் காரணமாக டீ மாஸ்டரை உருட்டுக்கட்டையால் தாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-05 19:27 GMT

முன்விரோதம்

கரூர் தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 56). இவர் அப்பகுதியில் உள்ள கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான பிரவீன் குமார் (20) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் முத்துக்குமார் தாந்தோணிமலையில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பிரவீன் குமார் முத்துக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

சிறையில் அடைப்பு

மேலும் ஆத்திரம் அடைந்த பிரவீன் குமார் உருட்டுக்கட்டையால் முத்துக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் தாந்தோணிமலை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து டீ மாஸ்டரை உருட்டுக்கட்டையால் தாக்கிய கல்லூரி மாணவர் பிரவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்