கல்லூரி காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ேதாகைமலை அருேக கல்லூரி காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-13 18:17 GMT

கல்லூரி காவலாளி

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள வடசேரி தெற்கு தெருவை சேர்ந்த வர்ரெத்தினம் (வயது 59). இவர் திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஒரு மகன், ஒரு மகளுக்கு திருமணமாகி அவர்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இதனால் ரெத்தினம் தனியாக வசித்து வந்தார். இதனால் அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ரெத்தினத்தின் வீடு வெகுநாட்களாக பூட்டியே கிடந்துள்ளது. மேலும் வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசி வந்தது.

தற்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், கதவை உடைந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரெத்தினம் தூக்கில் பிணமாக தொங்கி கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரெத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து ரெத்தினத்தின் மகள் ரம்யா கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்