மீன்வளக்கல்லூரியில் உலக மண்வள தின கொண்டாட்டம்

மீன்வளக்கல்லூரியில் உலக மண்வள தின கொண்டாடப்பட்டது.

Update: 2022-12-05 18:45 GMT

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மண்வளம் குறித்த கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியை சங்கரி என்ற ரேவதி வரவேற்று பேசினார். மீன்வளக் கல்லூரி முதல்வர் அகிலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியைகள் பத்மாவதி, மணிமேகலை, ராணி, மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் அந்தோணி ஆஸ்மின் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்