கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள்

நாகையில் முதல்- அமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

Update: 2023-02-07 18:45 GMT

நாகையில் முதல்- அமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு போட்டிகள்

நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2022-23-ம் ஆண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் பிரிவிலும், அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவிலும் பல்வேறு போட்டிகள் நடந்து முடிந்து விட்டன.

இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று முதல் தொடங்கின. இதில் தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, நீச்சல், வாலிபால், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஆண்கள்- பெண்கள் என தனித் தனி பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவ- மாணவிகள் பங்கேற்பு

தொடர்ந்து 3 நாட்களுக்கு நடக்கும் இந்த கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டியில் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் விளையாடி வருகின்றனர். இதில் 20-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் கல்லூரிகளில் இருந்து 2 ஆயிரம் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்