கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் கல்லூரி மாணவிகள் முதலிடம்

மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் கல்லூரி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

Update: 2023-04-20 19:26 GMT

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகை கல்லூரி மாணவ-மாணவிகள் இடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும், சமூக சிந்தனைகளையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. போட்டிக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். போட்டிகளில் மாணவ-மாணவிகள் மொத்தம் 39 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், கட்டுரை போட்டியில் முதல் இடத்தை திலகவதியும், 2-ம் இடத்தை உஷாதேவியும், 3-ம் இடத்தை அபிநயாவும் பிடித்தனர். பேச்சு போட்டியில் முதல் இடத்தை காயத்ரியும், 2-ம் இடத்தை பூபாலனும், 3-ம் இடத்தை நிஷாந்தும் பிடித்தனர். கவிதை போட்டியில் முதல் இடத்தை பிரீத்தாவும், 2-ம் இடத்தை அரபாத்தும், 3-ம் இடத்தை மருதாம்பாளும் பிடித்தனர். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் கலெக்டர் மூலம் விரைவில் வழங்கப்படவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்