வடக்கன்குளம்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி விழுப்புரத்தில் மாநில அளவிலான பெண்கள் மூத்தோர் கபடி போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. சகாயத்தாய் அறிவியல் மற்றும் கலை கல்லூரி மாணவிகள் பாரதி, அனுசுயா, திலகவதி, மனோஜினி, கார்த்திகா, நிஷாலினி, சுகிர்தா, பபிஅரசி ஆகியோர் கொண்ட குழுவினர் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தனர். மேலும் ரூ.1,25,000 காசோலையை பரிசாக பெற்றனர். அதற்குப் பயிற்சி அளித்த ஆசிரியர் வேல்முருகன், சிவா ஆகியோரை வாழ்த்தினர்.
மேலும் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற மகளிருக்கான வினாடி-வினா போட்டியில் மாணவி சுஜிதா, பகிலா ஆகியோர் முதலிடமும், காகித விளக்கு படம் போட்டியில் மேரி இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்தனர். நாகர்கோவில் ஜெரோம் கல்லூரியில் நடைபெற்ற மகளிருக்கான நினைவாற்றல் போட்டியில் சாசு மாலினி முதலிடமும், லூர்து அர்பணிகா இரண்டாம் இடமும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர்.
நாகர்கோவிலில் பெண்கள் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் அமிர்தா அபி, ஸ்ரீமதுமிதா, மோனிகா ஆகியோர் வாய் பேசமுடியாத வேடம் போட்டியில் மூன்றாமிடமும், ஆங்கில பேச்சுப்போட்டியில் மேரி பிரமிதா இரண்டாம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், அதற்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் எஸ்.ஏ.வி. குழுமம் சேர்மன் கிரகாம்பெல், பாலகிருஷ்ணா பள்ளி தாளாளர் திவாகரன், கல்லூரி நிர்வாகி செல்வி திவாகரன், முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் சாந்தி, பேராசிரியர்கள் ராஜலட்சுமி, நிஷா மற்றும் பலர் பாராட்டினர்.