கல்லூரி பேருந்து மோதி - 5-ம் வகுப்பு மாணவன் பலி

நாமக்கலில் கல்லூரி பேருந்து மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலியானார்.

Update: 2022-08-16 05:50 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கார்கூடல்பட்டி அடுத்த செம்மண்காடு பகுதியில், பள்ளி பேருந்துக்காக நிழல் கூடத்தில் காத்திருந்த 5-ம் வகுப்பு மாணவன் பிரபாகரன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த விபத்து குறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி பேருந்துக்காக காத்திருந்த சிறுவன் கல்லூரி பேருந்து மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்