நாகை அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் 8-ந் தேதி தொடங்குகிறது
நாகை அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் 8-ந் தேதி தொடங்குகிறது.
நாகை அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்த கல்வி ஆண்டில் சிறப்பு ஒதுக்கீடு, அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேர்ந்து படிக்க, மாணவ, மாணவிகளுக்கான முதல் கட்ட கவுன்சிலிங் வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 11-ந் தேதி (வியாழக்கிழமை) வரை நடக்கிறது. பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி. கணிதவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்று, வங்கி கணக்குப்புத்தகம், ஆதார் அட்டை, ரேஷன்கார்டு உள்ளிட்டவற்றின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.