நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் விலங்கியல் துறையில் முனைவர் ஆராய்ச்சி படிப்பு தொடக்கம்
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் விலங்கியல் துறையில் முனைவர் ஆராய்ச்சி படிப்பு தொடக்கம்
மோகனூர்:
நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் லத்துவாடி ஊராட்சி கணவாய் பட்டியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு என பல்வேறு பிரிவுகளில் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடப்பு 2022-23-ம் கல்வியாண்டு முதல் விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சி படிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு மற்றும் சேலம் பெரியார் பல்கலைக்கழக அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம் பெரியார் பல்கலைக்கழத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தகுதி உடையவர்கள் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ விலங்கியல் துறையில் முனைவர் பட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் முருகன் தெரிவித்தார். அப்போது விலங்கியல் துறை தலைவர் ராஜசேகர பாண்டியன் உடன் இருந்தார்.