முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை கலெக்டர் திடீர் ஆய்வு
திருவண்ணாமலையில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை கலெக்டர் முருகேஷ் திடீர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை கலெக்டர் முருகேஷ் திடீர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள ஒன்றிய மாதிரி ஆரம்பப் பள்ளியில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை கலெக்டர் முருகேஷ் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் சமையல் கூடத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் பள்ளி குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்யப்பட்டு இருந்த உணவை அதன் தரம் குறித்து சுவைத்து பார்த்தார். தொடர்து பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.
2270 சமையல் பொறுப்பாளர்கள்
பின்னர் இது குறித்து அவர் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1581 பள்ளிகளில் 88 ஆயிரத்து 988 மாணவ, மாணவிகளுக்கு முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக 2270 சமையல் பொறுப்பாளர்கள் பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.
ஆய்வின்போது மகளிர் திட்ட இயக்குனர் சையத்சுலைமான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணாசலம், பிரிதிவிராஜ், தாசில்தார் சரளா, வேங்கிக்கால் ஊராட்சி செயலாளர் நாராயணன் உள்பட பள்ளி தலைமை ஆசிரியர், துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.