கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று கடம்பத்தூர் ஒன்றியம் இருளஞ்சேரி ஆற்றோர வீதி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Update: 2022-07-12 11:36 GMT

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் இருளஞ்சேரி ஆற்றோர வீதி பகுதியை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இது குறித்து அவர்கள் கூறியதாவது, இருளஞ்சேரி ஆற்றோர வீதி பகுதியில் நாங்கள் காலம் காலமாக வசித்து வருகிறோம். எங்களிடம் மின் இணைப்பு, ரேஷன் அட்டை, ஓட்டு உரிமை, குடிநீர் இணைப்பு, பட்டா போன்ற அனைத்தும் உள்ளது.

இந்த நிலையில் நேற்று வருவாய் ஆய்வாளர் எங்கள் பகுதிக்கு வந்து 15 நாட்களில் நீங்கள் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கினார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நாங்கள் மாவட்ட கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர்.

பின்னர், இது சம்பந்தமான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்