பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்

கணியம்பாடி பகுதியில் ஆய்வுக்கு சென்ற கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

Update: 2023-02-14 18:32 GMT

அடுக்கம்பாறை

கணியம்பாடி பகுதியில் ஆய்வுக்கு சென்ற கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

பாடம் நடத்தினார்

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் பிளஸ்-2 வகுப்பறைக்கு சென்ற கலெக்டர், இயற்பியல் பாடத்தில் வரும் மின்னாற்றல் குறித்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு தரமாக உள்ளதா என சாப்பிட்டு பார்த்து பரிசோதனை செய்தார். தொடர்ந்து கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று, கிராமத்தில் மேற்கொள்ளப்படும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் குறித்த கணக்கெடுப்புகளை ஆய்வு செய்தார்.

கற்றல் திறன்

கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் மற்றும் கற்றல் திறன் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள புற நோயாளிகள் பிரிவில் சிரிச்சைக்காக வந்திருந்த பொது மக்களிடம் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மகளிர் சுய உதவி குழுவினர் தென்னை நாறில் இருந்து காலணி செய்யும் பணியையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, சப்-கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில், ஒன்றியக் குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்