அரசு மாதிரி பள்ளியில் கலெக்டர் ஆய்வு

சக்கரமல்லூர் அரசு மாதிரி பள்ளியில் கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.

Update: 2023-04-12 16:58 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் சக்கரமல்லூர் ஊராட்சியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மூன்று வேலை உணவு வழங்கப்படுகிறது. இங்கு கலெக்டர் வளர்மதி நேற்று திடீர் ஆய்ரு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்டிருந்த மதிய உணவினை பார்வையிட்டார்.

மேலும் மேல்நிலை தேர்வு எழுதிய மாணவர்கள் நீட் தேர்வில் எப்படி எளிமையாக தேர்ச்சி பெறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, ஆற்காடு ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், தாசில்தார் வசந்தி, ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்