அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு

விக்கிரவாண்டி அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-06-11 18:45 GMT

விக்கிரவாண்டி,

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14-ந்தேதியும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு 12-ந் தேதியும் (அதாவது இன்று) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கலெக்டர் பழனி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் கழிப்பறையை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் அங்கு ரூ,28 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் சீரமைக்கப்பட்டு வரும் சமையல் கூடத்தையும் அவர் ஆய்வு செய்தார். அதன்பின்னர் தும்பூர் ஊராட்சியில் திறந்த வெளி கிணறு அமைக்கும் பணி, கொட்டியா பூண்டி ஊராட்சியில் குளம் மேம்பாட்டு பணி உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணியை விரைந்து நல்ல தரத்துடன் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, முபாரக் அலி பேக், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, கருணாகரன், நடராஜன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்