மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கலெக்டர் ஆய்வு

எண்ணும், எழுத்தும் திட்டத்தில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-09-07 18:23 GMT

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள கசிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்பராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கசிநாயக்கன்பட்டியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடிமைய கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்