கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட துணி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கைகலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட துணி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-08-15 18:45 GMT


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம்

நம் நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தை பாதுகாக்கவும், விசைத்தறியாளர்கள் மற்றும் துணி ஆலைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 இயற்றப்பட்டுள்ளது. கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவு 5-ன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறிப்பீடுகளுடன் பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகையான ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

6 மாத சிறை

இந்த ரகங்கள் விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ன் படி தண்டனைக்குரிய செயலாகும். கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா? என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின்போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும். நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 6 மாத சிறை தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை வழங்கப்படும். மேலும் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து துணை இயக்குனர், அமலாக்கம், குறளகம் 2-ம் தளம், சென்னை 104-ல் இயங்கி வரும் துணை இயக்குனர் அமலாக்கம் அலுவலகத்தையோ அல்லது தொலைப்பேசி மூலமாக (044-25346295) தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்