சிறுமியை காப்பாற்றிய வாலிபருக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு

குற்றாலம் அருவியில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய வாலிபரை கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டினார்.

Update: 2022-12-31 18:45 GMT

விளாத்திகுளத்தை சேர்ந்தவர் விஜயகுமார். கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 29-ந் தேதி காரில் பழைய குற்றாலத்திற்கு சென்றார். அங்கு குளித்துவிட்டு திரும்பும் போது பழைய குற்றாலம் அருவியில் வெள்ளத்தில் 4 வயது சிறுமி இழுத்து செல்லப்படுவதை கண்டு பொதுமக்கள் கூச்சலிட்டனர்.

இதைப் பார்த்த விஜயகுமார் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், தண்ணீர் அதிகமாக சென்ற பாறைகள் நிறைந்த 100 அடி பள்ளத்தில் இறங்கி சிறுமியை காப்பாற்றினார். அந்த சிறுமி கேரளம் மாநிலம் பாலக்காடு அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த ஹரிணி என்பது தெரிய வந்தது. சிறுமியை காப்பாற்றிய விஜயகுமாரை சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

இந்தநிலையில் சிறுமியை காப்பாற்றிய விஜயகுமாரை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்