ரேஷன் கடைகளில் கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு

கோவை ரேஸ்கோர்ஸ் ரேஷன் கடைகளில் கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-12-15 18:45 GMT

கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று ரேஸ்கோர்ஸ் பகுதி யில் 2 அமுதம் அங்காடி ரேஷன் கடைகள் மற்றும் தாமஸ் பார்க்கில் உள்ள சிந்தாமணி ரேஷன் கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், குடும்ப அட்டைக ளின் எண்ணிக்கை, ரேஷன் பொருட்கள் இருப்பு, வினியோகம் உள் ளிட்ட விபரம் குறித்த பதிவுகளை விற்பனை முனைய எந்திரத்தை இயக்கி ஆய்வு செய்தார். மேலும் கடைகளில் இருந்த அரிசி, பாமாயில், கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களை கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து அவர், ரேஸ்கோர்சில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், மாணவர்கள் தங்கும் அறை சுத்தமாக உள்ளதா என்று மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

இதேபோல் கோவை பாலசுந்தரம் ரோட்டில் 45 மாணவர்கள் தங்கி உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதியையும் ஆய்வு செய்தார். மேலும் அந்த வளாகத்தில் ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் 150 கல்லூரி மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டு வரும் விடுதி கட்டிட கட்டுமான பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட வழங்கல் அலுவலர் சிவகுமாரி, தாட்கோ செயற்பொறியாளர் சரஸ்வதி, உதவி செயற் பொறியாளர் மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்