நியாயவிலை கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருவண்ணாமலையில் நியாய விலை கடைகளில் கலெக்டர் முருகேஷ் திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2022-12-30 11:00 GMT


திருவண்ணாமலையில் நியாய விலை கடைகளில் கலெக்டர் முருகேஷ் திடீர் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக முதன்மை செயலாளரின் அறிவுரையின்பேரில் திருவண்ணாமலை தாலுகா வேங்கிக்கால் கூட்டுறவு நியாயவிலைக் கடை எண்.1,

திருவண்ணாமலை நகராட்சி துராபலி தெரு கற்பகம் கடை எண்.25 மற்றும் ராமலிங்கனார் 13-வது தெருவில் செயல்பட்டு வரும் கடை எண். 41 ஆகிய 3 நியாயவிலைக் கடைகளை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நியாயவிலைக் கடைகளின் செயல்பாடு, அடிப்படை வசதிகள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களின் கருத்துகள் குறித்து ஆய்வு செய்தார்.

கழிவுநீர் கால்வாய்கள்

மேலும் நியாயவிலைக் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள் ஆகியவற்றை சுத்தமாக பராமரிக்க சம்பந்தப்பட்ட திருவண்ணாமலை நகராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது திருவண்ணாமலை கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், துணைப்பதிவாளர் (பொதுவினியோக திட்டம்) ஆரோக்கியராஜ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலர் முருகன் மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்