கலெக்டர் பாராட்டு

சிறந்த நூல் எழுதியவரை கலெக்டர் பாராட்டினார்.

Update: 2022-06-19 18:56 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி மனுநூல் நிலைய நிறுவனரான பரதன் தமிழக அரசு புள்ளியியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தனது ஓய்வுக்கு பிறகு தன்னுடைய வீட்டை நூலகமாக மாற்றி அதற்கு மனுநூல் நிலையம் என்று பெயரிட்டு நூலகம் நடத்தி வருகிறார். இவர் காரியாபட்டி வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் எவ்வாறு உருவானது. கிராம பெயர்கள் வரக்காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை என்ற நூலை எழுதினார். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை இந்த நூலை சிறந்த நூலாக தேர்வு செய்தது. இதற்கான விருதினை பரதனுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். இதையடுத்து அவருக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்