மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பழனி தகவல்

விழுப்புரம் மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-19 18:45 GMT

47-வது சர்வதேச அளவிலான திறன் போட்டிகள் வருகிற 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்சில் உள்ள லியான் நகரில் நடைபெற உள்ளது. இதற்கு வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் "இந்தியா ஸ்கில்ஸ் 2023" என்கிற திறன் போட்டியில் பங்குபெறும் வகையில் தகுதிவாய்ந்த போட்டியாளர்களை தேர்வு செய்யும் விதமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தால் நான் முதல்வன் தளத்தின் கீழ் "டி.என்.ஸ்கில்ஸ்-2023" என்ற திறன்போட்டி நடத்தப்பட உள்ளது.

முதல்கட்டமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் ஜூலை மாதம் 15-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்ட அளவில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://naanmudhalvan.tn.gov.in/tnskills/#எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் மாநில அளவில் நடைபெறும் திறன் போட்டியிலும் அதனைத்தொடந்து மண்டல அளவிலான திறன் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி போட்டியாளர்கள் 2023 டிசம்பரில் நடைபெறவுள்ள இந்திய அளவிலான திறன் போட்டியிலும் பங்குபெறுவார்கள். மொத்தம் உள்ள 55 திறன் போட்டிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட அளவில் விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்கலாம்

இதில் 45 திறன் பிரிவுகளில் பங்கேற்பவர்கள் 1.1.2002 அன்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களாகவும், வாட்டர் டெக்னாலஜி, சைபர் செக்யூரிடி, இன்டஸ்ட்ரி 4.0, மெக்கட்ரானிக்ஸ், ரோபோட் சிஸ்டம்ஸ், இன்டிகிரேசன் அடிட்டிவ் மேனுபேக்ச்ஸரிங், கிளவுட் கம்பியூட்டிங், டிஜிட்டல் கன்ஸ்ட்ரக்சன், இன்டஸ்டிரியல் டிசைன் டெக்னாலஜி, இன்பர்மேசன் டிசைன் டெக்னாலஜி, இன்பர்மேசன் நெட்வொர்க் கேபிளிங் போன்ற பிரிவுகளுக்கு 1.1.1999 அன்றும் அதற்கு பின்னரும் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

இப்போட்டியில் பங்கேற்க தனித்திறன் பெற்ற 10 வயது நிரம்பியவர்கள் முதல் உயர்நிலைக்கல்வி, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவ சார்பு துறைகளில் படித்து கொண்டிருப்பவர்கள் மற்றும் தனித்திறன் பெற்றவர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், தொழிற்பழகுனர் பயிற்சி பெறுபவர்கள் என ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்போட்டி குறித்த விவரங்களை நான் முதல்வன் இணையதளத்திலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முதல் மாடி, விழுப்புரம், தொலைபேசி எண் 04146 294989 அலுவலகத்தை தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்