நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;- நாடு முழுவதும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும், உரிமம் பெற்று ஓட்டல்கள், கிளப்புகளில் இயங்கி வரும் பார்களும் மூடப்பட வேண்டும். இதேபோல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி வள்ளலார் நினைவு தினத்தன்றும் டாஸ்மாக் கடைகள் இயங்காது. அரசு உத்தரவுகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.