உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

ஆம்பூரில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-07-08 16:41 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியம் நாயக்கனேரியில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய 1-வது வார்டு, கிராமத்தில் உள்ள 1-வது முதல் 9-வது வரை உள்ள ஊராட்சி வார்டுகள் ஆகியவற்றுக்கு சனிக்கிழமை தேர்தல் நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு பள்ளக் கொல்லை உண்டு உறைவிட பள்ளி மற்றும் நடுவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. இதனையொட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார். மேலும் வாக்காளர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முககவசம் அணிந்தும், சமூக இடைவேளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார் பின்னர் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா எனவும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பள்ளக்கொல்லை உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு செய்து, மாணவ மாணவர்களிடம் உரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை கலெக்டர் பரிசோதித்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கலீல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்