ஊட்டியில் ரூ.11¾ கோடியில் கட்டப்படும் குடியிருப்புகளை கலெக்டர் ஆய்வு
ஊட்டியில் ரூ.11¾ கோடியில் கட்டப்படும் குடியிருப்புகளை கலெக்டர் ஆய்வு
ஊட்டி
ஊட்டி சாதிமஹால் பகுதியில், பொதுப்பணித்துறை சார்பில், ரூ.11.86 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு குடியிருப்புக்களை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சாதிமஹால் பகுதியில் பி பிரிவில் 12 குடியிருப்புகளும், சி பிரிவில் 18 குடியிருப்புகள் உள்பட மொத்தம் 50 அரசு குடியிருப்புகள் ரூ.11.86 கோடி மதிப்பில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. இதில் ஒரு பகுதியாக சாதிமஹால் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை, கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அய்யாசாமி செயற்பொறியாளர் செந்தில் கமலாஹர், உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.