இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு
மின்னூர் பகுதியில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 76 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் கலீல், சந்திரன், தாசில்தார் மகாலட்சுமி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.