அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-17 11:31 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியை சுற்றி பே கோபுரத் தெரு சந்திப்பு திரவுபதி அம்மன் கோவில் முதல் காந்தி சிலை வரையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அதன்அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத் துறை, நகராட்சித் துறை ஆகிய 3 துறைகள் மூலமாக பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் நேற்று மாடவீதியில் சிமெண்டு சாலை அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், இந்த பணிகளை பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் 3 மாதத்திற்குள் விரைந்து முடித்திட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ராஜ்குமார், திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், நகராட்சி பொறியாளர் நீலேஸ்வரன், திருவண்ணாமலை தாசில்தார் சரளா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்