பாதுகாப்பு அறையின் உறுதித்தன்மை குறித்து கலெக்டர் ஆய்வு
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் உறுதித்தன்மை குறித்து கலெக்டர் ஆய்வு செய்தாா்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த சேமிப்பு கிடங்கின் பாதுகாப்பு அறையின் உறுதித்தன்மை குறித்து நேற்று முன்தினம் காலை மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான மோகன், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிசந்திரன், தனி தாசில்தார் (தேர்தல்) உஷா, விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, அ.தி.மு.க. நகர செயலாளர் ராமதாஸ், முன்னாள் அரசு வக்கீல் தமிழரசன், வக்கீல் ஸ்ரீதர், பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் சுகுமார், நகர தலைவர் வடிவேல் பழனி, தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.