வாடிப்பட்டி பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

வாடிப்பட்டி பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்

Update: 2023-06-07 20:32 GMT

வாடிப்பட்டி, 

வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாடிப்பட்டி நகரப்புற சாலையில் இருந்து குலசேகரன் கோட்டை வரை 1½ கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் தார் சாலை, புதிய வள மீட்பு பூங்கா, குலசேகரன்கோட்டை சமுதாய கழிப்பறை, ஆர்.வி.நகர் பூங்கா, ரெங்க சமுத்திரம் ஊருணி மேம்பாட்டு பணி, யூனியன் ஆபீஸ் சாலையில் பொதுகழிப்பிடம், தாதம்பட்டி நீரேத்தான் எரிவாயு தகன மேடை உள்ளிட்ட பணிகளை கலெக்டர் சங்கீதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது செயல் அலுவலர் (கணக்கு) கண்ணன், இளநிலை பொறியாளர் கருப்பையா, இளநிலை உதவியாளர் முத்துப்பாண்டி, சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்தழகு ஆகியோர் வந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்