வளர்ச்சி தி்ட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி அருகே வளர்ச்சி தி்ட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்கீரனூர் கிராமத்தில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிட பணி, உயர்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து சமையலறை கூடம் சீரமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஷ்ரவன்குமாா் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட இருந்த முட்டை மற்றும் மதிய உணவின் தரம் குறித்து சோதனை செய்து பார்த்தார். பின்னர் 10-ம் வகுப்பு மாணவர்களிடம் கலெக்டர் கலந்துரையாடினார். அப்போது அவர் அங்கிருந்த ஆசிரியர்களிடம், ஆங்கிலம் பீழையின்றி எழுதுவதற்கும், பேசுவதற்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.