வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

தியாகதுருகம் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-16 18:45 GMT

தியாகதுருகம், 

கலெக்டர் ஆய்வு

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விளக்கூர் மற்றும் வடபூண்டி ஆகிய ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது விளக்கூர் புதுக்காலனி பகுதியில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சமையற்கூட கட்டிடம், வடக்குத்தெருவில் ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டில் வடிகால் வசதியுடன் கூடிய சிமெண்டு சாலை அமைக்கும் பணி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணியின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து வடபூண்டி ஊராட்சியில் பள்ளி உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறை கட்டிடங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் கட்டுமான பணி, 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையற்கூட கட்டிடத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தரமாக முடிக்க வேண்டும்

அப்போது பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் முருகன், சீனிவாசன், ஒன்றிய பொறியாளர்ஜெயப்பிரகாஷ், பணி மேற்பார்வையாளர்கள் சேகர், சந்திரசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்